Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை அழைத்து சென்ற தந்தை…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாலிடெக்னிக் மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நவீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனிராஜ் தனது மகனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நவீன் இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |