Categories
உலக செய்திகள்

மகனை இழந்து துடிக்கும் உக்ரைனிய தாய்…. கண்கலங்க வைக்கும் புகைப்படம்….!!!!

உக்ரைனில் உள்ள புச்சா நகரில் போரில் பலியான பொதுமக்களின் சடலங்கள் சாலையில் கிடந்தது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் ரஷ்ய படைகள் புச்சா நகரில் பொதுமக்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்த நிலையில் புச்சா நகரில் போரில் உயிரிழந்த சொந்தங்களை இழந்து வாடும் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் Nadiya Trubchninova (வயது 70) என்பவர் தன்னுடைய மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதில் வேதனை என்னவென்றால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக தேடி தன்னுடைய மகனின் சடலத்தை Nadiya Trubchninova கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |