Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. கல்லூரி மாணவரின் விபரீத முடிவு….. கதறும் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தில் ராமையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த முத்துக்குமாரை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |