தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையை படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.