வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அருணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.