பெற்றோர் கண்டித்ததால் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கள் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.பி.ஏ. படிக்கும் சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் வேலை பார்க்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.