பெற்றோர் கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உரக்குழி கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன்ராஜ் என்ற 14 வயது உடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சுமன்ராஜை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.