Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் குடிக்க பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமசாமியார்புறம் கிராமத்தில் நீராத்தலிங்கம்- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் குடிப்பதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் தர மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |