சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் விக்னேஷ் குமார் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விக்னேஷ் குமார் செலவுக்கு பணம் இல்லாததால் ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஏழுமலை தனது மகனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் விக்னேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.