வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென காணாமல் போன விஜயகுமாரை அவரது தாய் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டிக்கு அருகில் உள்ள மரத்தில் விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.