திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தையூர் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவப்பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரின் சிகிச்சை அழுத்துவதற்காக கிணற்றின் பக்கவாட்டு பகுதிக்கு சென்ற போது கால் தவறி சிவப்பிரகாஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சுகப்பிரகாசின் தந்தை சின்னதுரை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவரின் செல்போன் மட்டுமே கிடந்தது.
இதுகுறித்து சின்னத்துரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சேற்றில் சிக்கியிருந்த சிவப்பிரகாஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.