Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தந்தை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தை மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கீழகுயில்குடி அருகில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருக்கும் தனது மகன் ரஞ்சித் குமாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் அங்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேந்திரன் மற்றும் ரஞ்சித் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |