Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் பகுதியில் ஆறுமுகம் பகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஆறுமுகம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக ஆறுமுகமும் அவரது மனைவியும் மும்பைக்கு சென்று சில நாட்கள் அங்கேயே தங்கியுள்ளனர். அதன்பின் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 23,000 பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆறுமுகம் ஆரல்வாய்மொழி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |