நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாரப்பநாயக்கன்பட்டியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் என்ற மகன் இருந்துள்ளார். ரிக்வண்டி தொழிலாளியான பாஸ்கரனுக்கு மீனா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாஸ்கரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் மீனா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த பாஸ்கரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.