Categories
சினிமா

ஐஸ்வர்யாவின் போட்ட பதிவு…. அதுக்கு பின்னால் இம்புட்டு விஷயம் இருக்கா?…. இது தெரியாம போச்சே….!!!

ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை எதற்காக வெளியிட்டார் என்பதற்கான காரணம் கூறப்பட்டு வருகின்றது.

தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார், இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனுஷிடம் இருக்கதான் விரும்புகிறார்கள் என இணையத்தில் பேசப்பட்டது. மேலும் ஐஸ்வர்யாவை விட தனுஷின் மீதுதான் மகன்களுக்கு பாசம் அதிகம் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் மீதுதான் மகன்களுக்கு பாசம் அதிகம் என்பதை நிரூபிப்பதற்காக இந்த படத்தை வெளியிட்டு உள்ளார் என கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

Categories

Tech |