தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர் இதில் இளைய மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். காலை 11 மணியளவில் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பள்ளி சீருடையுடன் சீனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் பள்ளியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.