மாமனார் ஒருவர் தன மருமகளுக்கு மறுமணம் செய்து கொடுத்து தனது சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வசிப்பவர் ரவி சங்கர் சோனி என்பவரின் மகன் சஞ்சய். இவருக்கு சரிதா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சஞ்சய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இளம் வயதில் விதவையான தன்னுடைய மருமகள் சரிதாவின் பரிதாப நிலையை கண்டு அவருடைய மாமனார் சோனி மிகுந்த வேதனைப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்த சோனி, சரிதாவின் பெற்றோர் சம்மதத்துடன் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் தனது மனைவியை பறிகொடுத்த ராஜேஸ் என்பவருக்கு தன்னுடைய மருமகள் சரிதாவை இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் ரவி சங்கர் சோனி தலைமையில் தலைமை நடந்துள்ளது. மேலும் தனது மகன் ஸ்தானத்தில் உள்ள தன் மருமகள் சரிதாவுக்கு கார், நகைகள் மற்றும் தான் சேர்த்து வைத்திருந்த பணம் ஆகியவற்றை சோனி எழுதிக்கொடுத்துள்ளார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.