Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கத்திலும்… உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த தாயார்…. 5 பேருக்கு மறுவாழ்வு…. நெகிழ்ச்சி சம்பவம்.!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் நகரில் வசித்து வருபவர் மலையப்பன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஹரிஹரன்(23). இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து டீன் நிர்மலா ஆலோசனையின்படி ஹரிஹரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஹரிஹரனின் தாயார் பழனியம்மாள் மகன் இறந்த சோகத்தில் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடைபெற்று ஹரிஹரன் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதன்பின் கல்லீரல் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பார்வை இழந்த இரண்டு பேருக்கு ஹரிஹரனின் இரண்டு கண்கள் பொருத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு கலெக்டர் சமீரன், டீன் நிர்மலா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அவரது தாயாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |