மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாரிவள்ளல் நகரில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அரசி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அரசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.