Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த வேதனை”…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் போரூர் அருகே இருக்கும் ரெசாரத்துக்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதி வாழ்க்கையை வெறுத்து நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் சஞ்சீவ் சங்கரும் இறந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |