Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் பொறுப்புக்கு வந்த பிறகு…! கட்சிக்குள் மாற்றமில்லை…. ஏற்றம் ஏதுமில்லை…. வைகோ பரபர பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகன் துரைகட்சிக்குள் வந்த பிறகு, கட்சியில் மாற்றம், கட்சியில் ஏற்றம் எதுவும் இல்லை. மாவட்ட செயலளார்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து 106 பேர் கலந்து கொண்டோம் அந்த கூட்டத்தில், முன்கூட்டி எதுவும் சொல்லாமல் அவர் வரவேண்டுமென்று இரண்டு ஆண்டுகள் காலமாக  கட்சி தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதிலே எனக்கு  விருப்பம் இல்லை என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இந்த நேரத்தில் இந்த பிரச்சினை வந்தபோது அவர் அரசியலுக்கு வரவேண்டுமா ?  வர வேண்டாமா ? என்று  ஒரு ரகசிய ஓட்டெடுப்பு. வேண்டும், வேண்டாம் என்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதே தாயகத்தில் நடத்தப்பட்டுள்ளது. 106 பேர் ஓட்டு போட்டார்கள், அதில் 104 பேர் அரசியலுக்கு வரவேண்டுமென்று வாக்களித்தார்கள், 2 பேர் வேண்டாமென்று வாக்களித்தார்கள். ஆகவே இது தொண்டர்கள் கருத்து.

தமிழ்நாடு போலீஸ் வந்து ஸ்காட்லான்ட்யாடுக்கு நிகரானது என்று ஒரு பெயரும் உண்டு. ஆனால் ஏழு படை, ஒன்பது படை அமைத்து இன்னும் கூட அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது காவல் துறைக்குப் பெருமை அளிப்பது இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்கள் வாங்கவேண்டும் என்பதெல்லாம் பேச்சுவார்த்தையில் பேச வேண்டியது. அதெல்லாம் இப்ப முன்கூட்டியே சொல்ல முடியாது, அது நல்லதும் இல்லை கூட்டணிக்கு.

திமுக தலைமையிலான இந்த அரசு பாஜகவுக்கு பணிந்து போகவில்லை, நிமிர்ந்து தான் நிற்கிறது, சாதனை மேல் சாதனை செய்து பாராட்டுகளை வாங்கியுள்ளது. மத்திய அரசே வந்து வேறுவழியில்லாமல் அவங்களே தமிழக அரசை பாராட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆகையால் தமிழக அரசை, மத்திய அரசு மதிக்க வேண்டிய நிலையில் உள்ளது என கூறினார்.

Categories

Tech |