முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ராசாத்தி என்பவர் வீட்டில் கடந்த மாதம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் ரங்கசாமியின் இளைய மகன் மற்றும் மருமகள் நகைகளை திருடி உள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ரங்கசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.