மகரம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்ணின் சினேகமும், தனக்கென தனி வீடும் வாங்கக்கூடிய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். ஆனால் எந்தவித மாற்றமும் இல்லை, எதிர்பார்த்தபடியே இருக்கும். எதிர்பாலினரிடம் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரலாம் ,உடல்நல பாதிப்பு கொஞ்சம் இருக்கும். கவனத்தில் கொள்ளுங்கள்.
சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்,படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். கூடுமானவரை உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள். தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
பழ வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், இரவில் தூங்குவதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும், அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்