மகரம் ராசி அன்பர்களே..! இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு விலகிச்செல்லும். பணவரவு நல்லபடியாகவே வந்துசேரும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நட்பு இன்று ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க நேரிடும். பொன், பொருள் சேரும்.
மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் கூட அனுகூலப் பலனை நீங்கள் அடைய முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி கொடுக்கும். இன்றைய நாள் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்