மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உங்கள் வேலைகளை உடன்பிறந்தவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று மனக்கலக்கம் ஏற்படும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும். எவ்வளவுதான் நீங்கள் திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களுடைய விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு ஓரளவு நினைத்தபடி இருக்கும். எதிர்பாலினரிடம் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உங்களுக்கு இருக்கும்.
பெண்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் . இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும், தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் இன்று நீங்கள் பெறக்கூடும், அதுமட்டுமில்லை தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள இரண்டு நிமிடம் தியானம் போன்றவை பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அதேபோல் தேர்வு முடியும் வரை உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது. காரமான உணவு வகைகளை தவிர்த்து விட்டு, பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு செல்லுங்கள்.
நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்