Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… இனிய சம்பவங்கள் நடைபெறும்.. நிர்வாக திறமை பளிச்செடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும். உங்களுடைய நிர்வாகத் திறமை இன்று பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்துகொள்வார்கள். மாமன் மைத்துனர் வழியில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் விலகிச் செல்வார்கள். நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

வேலை பளு அதிகரிப்பால் உடல்நிலை மட்டும் கொஞ்சம் சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடி கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு சோதனைகளும் நிறைந்த காலமாக தான் இன்றைய காலம் இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது ரொம்ப உத்தமம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று சிறப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |