மகரம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும். நீண்ட கால குறிக்கோள் ஒன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் கிடைக்கும். பெண்களால் சுப விரயங்கள் ஏற்படும் குடும்ப நிலையில் அதிக அக்கறை ஆகவும் இருப்பார்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சிகரமான சூழல் இன்று அமையும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் கொஞ்சம் உண்டாகலாம், கவனமாக இருங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று மாணவச் செல்வங்களும் பொதுமக்களும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கத்தால் சொல்லக்கூடிய அனைத்து விதமான விஷயங்களையும் நாம் அலட்சியம் காட்டாமல் பின்பற்றவேண்டும்.
தயவுசெய்து அலட்சியம் மற்றும் இந்த விஷயத்தில் காட்ட வேண்டாம். உலக நாடுகளில் இருக்கக்கூடிய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் அந்த நாட்டு மக்களின் அலட்சியப் போக்கு தான். தயவுசெய்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன. அனைத்து விஷயங்களையும் நாம் கடைபிடித்து இந்த வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்திட நாம் கடுமையாக பாடுபடுவோம். நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் தேச நலனைப் பாதுகாக்கவும் கண்டிப்பாக நீங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து முழு ஒத்துழைப்புக் கொடுத்து இந்த வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவோம்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண்-: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்