Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எதிர்ப்புகள் விலகும்….! விட்டுகொடுக்க வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! மனம் சந்தோஷம் கொள்ளும். 

இன்று சிலர் சொல்லும் அறிவுரைகள் உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். நீங்கள் கொஞ்சம் விட்டுகொடுத்து செல்ல வேண்டும். சில நேரங்களில் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருக்கும். பேசும் போது சில குழப்பமான வார்த்தைகள் வெளிப்பட்டுவிடும். பார்த்து நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தை அற்புதமாக பார்த்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். வேலை செய்பவரிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் மென்மேலும் நல்லது நடக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். பழைய கடனை அடைத்து விடுவீர்கள். மனம் சந்தோஷம் கொள்ளும். எதிர்ப்புகள் விலகி செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது கவனம் வேண்டும்.

பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும். இந்த காதல் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். வாழ்கையில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் எழும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |