மகரம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும், ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் இன்று இணக்கமாக நடந்து கொள்வார்கள், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குழப்பமான சூழ்நிலை மாறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாகவே செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை ஏற்படும். வெளியில் தங்க கூடிய சூழல் இருக்கும்.
எடுத்த காரியத்தை செய்யும் பொழுது எது சரி, எது தவறு என்ற தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும், உங்களது வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்