Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…கோவத்தை குறைத்து கொள்ளுங்கள்.. எதிலும் பொறுமையாக செயல்படுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கோபத்தை அடக்கி அனைவரிடமும் நீங்கள் பணிவுடன் நடந்து கொண்டாலே போதுமானதாகவே இருக்கும். மௌனமே கோபத்திற்கு மருந்து, எனவே எதற்கும் வாய் திறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைவதில் தடைகள் கொஞ்சம் இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை பயப்பட வேண்டாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனசஞ்சலம் தோன்றினாலும், ஒற்றுமைக்கு  குறைவிருக்காது. கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

பண விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். நீங்களும் பணத்தை இன்று கடனாக வாங்க வேண்டாம். இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டாலே காரியங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் பெரியவர்களிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு காரியங்களைச் செய்யுங்கள். நிதானமான போக்கு தான் இன்று உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். இன்று மாணவர்கள் பொறுமையாகவும் கொஞ்சம் நிதானமாகவும் கண்டிப்பாக செயல்பட வேண்டும். அப்பொழுது தான் எளிதில் வெற்றி பெற முடியும். தேர்வில் எந்தவித பிரச்சினையும் இல்லை நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |