மகரம் ராசி அன்பர்களே..! இன்று முக்கிய செயல் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும். தொழில் வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வார்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும். சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். வளமும், நலமும் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் இன்று நடைபெறும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கல்வியில் நல்ல வாய்ப்புகளும் ஏற்படும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்