Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..தன்னமிபிக்கை அதிகரிக்கும்.. முன்னேற்றம் கன்பீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணம் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். காணாமல் போன முக்கிய பொருள் ஒன்று உங்கள் கையில் வந்து சேரும். வியாபாரத்தில் விஐபிக்கள்  வாடிக்கையாளர்கள் ஆக மாறுவார்கள.

உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழும், கௌரவமும் கூடும் நாளாகவே இருக்கும். இன்று தூக்கமின்றி தவிப்பார்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாக நடைபெறும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான சூழ்நிலை ஏற்படும். இன்று கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதுகாத்திடுங்கள்.

சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லதாகவே இருக்கும். முடிந்தால் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று இறை வழிபாட்டோடு இன்றைய நாளை தொடங்கி, உங்களுக்கு பாதி பிரச்சனை சரியாகிவிடும் . இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை முற்றிலும் விலகி செல்லும்.

நல்ல முன்னேற்றம் இருக்கும், இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதுபோலவே ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:  5 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |