Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…திறம்பட சமாளிக்க கூடும்..கடன் யாரிடமும் வாங்காதீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் நல்ல செயலை பரிகாசம் செய்வார்கள். யாரையும் நீங்கள் தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் இன்று சுமாராகத்தான் இருக்கும். நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்க நேரிடும், பார்த்துக்கொள்ளுங்கள், பணியாளர்கள் திறம்பட சமாளிக்க கூடும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடும். இன்று  தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

வாகனங்களால் செலவு கொஞ்சம் ஏற்படும். தந்தையின் மூலம் சில கருத்து வேற்றுமை கருத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கும் .சொத்துகளை அடைவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். யாருக்கும் இன்று வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள், பணத் தேவைக்காக கடன் வாங்காதீர்கள், நீங்களும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள், நிதானமாகவே செயல்படுங்கள். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது, படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.

தேர்வு முடியும் வரை உணவில் கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |