மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரளவு முன்னேற்றங்கள் ஏற்படும்.
மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருங்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் மற்றும் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்க கூடும். மாணவ மாணவியர்களுக்கு தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:3.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.