மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். ஆரோக்கியம் பலம் பெறும் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவர்கள் ஆவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். நீண்டநாள் கஷ்டங்கள் நீங்கும். பலவிதத்திலும் இன்று நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும்.
அதுமட்டுமில்லை பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர் தைரியம் உங்களுக்கு உண்டாகும். இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். கவனமுடன் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் தேர்வு முடியும் வரை மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் அமைதி பெற்று தேர்வும் உங்களுக்கு சிறப்பாகவே அமையும் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பாடங்களைப் படியுங்கள், அதேபோலவே தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டு செல்லுங்கள் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்