Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.. உடல்நலம் சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன்  நடந்து கொள்வார்கள். எதிர்ப்பாக இருந்த தொழில் கூட்டாளிகளின் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள். உடல்நலம் சீராக இருக்கும்.இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை திட்டங்களை தீட்டி காரியங்களை செய்வது ரொம்ப நல்லது. புதிய முதலீடுகளை மட்டும் தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். வருமானம் போதிய அளவு வந்து சேரும். வேலையாட்கள் சரியான நேரத்திற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். அதேபோல குடும்பத்தினருடன் சில முக்கியமான பணியை பற்றி ஆலோசனையும் மேற்கொள்வீர்கள். தெய்வீக சிந்தனை மேலோங்கும், இதற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று அன்பு கூடும் நாளாகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. இளம் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நீங்கள் நினைத்தது ஓரளவு நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |