Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… புதிய நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. வேலைகளில் கவனம் செலுத்துங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். அதனால் கடன் வாங்கவேண்டிய சூழல் இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மன சஞ்சலங்களை கொஞ்சம் ஏற்படுத்தலாம். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் கொஞ்சம் இருக்கும். பணவரவு திருப்தி கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவு கவனம் இருக்க வேண்டும்.

புதிய நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இன்று கூடும். துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்திலும் எடுபட்டு சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். இன்று பணம் பற்றாக்குறை இருந்தாலும் மனம் மட்டும் உங்களுக்கு திருப்தியாக இருக்கும். அதனால் என்னமோ உங்களுக்கு அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய பொறுமையும், நிதானமும் மட்டுமே காலங்கள் உங்களை வெகுவாக உயர்த்திச் செல்லும்.

நல்ல முன்னேற்றங்களையும் அனுபவிக்க கூடும். முடிந்தால் இன்று ஆலயம் மட்டும் சென்று வாருங்கள், மிகவும் சிறப்பாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்லும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன  தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள  தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |