மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபட்டால் கீர்த்தி காணவேண்டிய நாளாகவே இருக்கும். முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் வீட்டு காரியம் சுபமாக நடக்கும். இன்று உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது நல்லது.
இன்று மன அமைதி நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் கல்வியில் நல்லதாகவே வெற்றிபெற முடியும். இதை மட்டும் நீங்கள் தயவுசெய்து செய்யுங்கள். அது மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் பொழுது கவனமாக ஈடுபட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன, சின்ன பூசல்கள் இருக்கும் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்