Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பொறுமை தேவை….! பணவரவு ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! பொறுமையாக செயல்பட வேண்டும்.

இன்று பிறர் விமர்சனத்தை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகி செல்லும். பணவரவு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்க கூடிய அனுகூலமும் இருக்கும். சில நேரங்களில் வீணான பழி சொல் எடுக்கக்கூடிய சூழலும் இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவிப் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவது மற்றவர்களை அனுசரித்து செல்வதும் சக நண்பர்களையும் சக ஊழியர்களையும் கொஞ்சம் கடுமையை காட்டாமல் பேசுவதும் ரொம்ப நல்லது.

மாமன் மைத்துனன் உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகளுக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். தாய் தந்தையர் மீது பிரியமாக நடந்து கொள்வீர்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்யுங்கள் முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் கருநீலம்

Categories

Tech |