மகரம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல செயல்களால் சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி கூடுதல் பணவரவு கிடைக்கும். உங்களுடைய மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும், குடும்ப பிரச்சினை தீரும், தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் நல்ல விஷயங்கள் இன்று சிறப்பாக செயல்படும்.
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள், நினைத்ததையும் முடித்துவிடுவேன் என்ற உங்களுடைய அறிவுத்திறனும் இன்று அதிகரிக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் கூடும். மாணவர்கள் மட்டும் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கொஞ்சம் தேர்வு முடியும் வரை கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், அதேபோல தேர்வு முடியும் வரை உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான: திசை மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்