Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள்… குளறுபடிகளை சரி செய்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை சரிசெய்ய முயல்வார்கள். லாபம் சுமாராகவே இருக்கும். மற்றவர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை மட்டும் தயவுசெய்து ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய சிக்கலையும் வம்பு வழக்குகளையும் நீங்கள் சந்திக்கக்கூடும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக் கூடிய காலமாக இன்றைய நாள் இருக்கும். எதிலும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். வாகன பராமரிப்பு செலவும் இன்றி ஏற்படும். மிக முக்கியமாக நீங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |