மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு தான் கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். குடும்ப ஒற்றுமை மிகவும் தேவையாகும். குடும்பத்தாரிடம் அன்பாக பேசுங்கள். இன்று வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து செல்லும். நல்ல செய்திகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நெடு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். கூடுமானவரை கணவன்-மனைவி எந்த பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அது போலவே இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். அதுமட்டுமில்லை இந்த வருடம் முழுவதும் நீங்கள் ஒரு சாதகமாகவே காணப்படுவீர்கள்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிஷ்ட திசை: அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்