மகரம் ராசி அன்பர்களே, இன்று எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்கள் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகை ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று பணம் பலவழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் கவலை மனதில் தோன்றும்.
வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனம் அவசியம். நண்பர்களின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகளும் தாமதப்படும். இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். இன்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். மனோதைரியம் உடனிருக்கும் கவலை வேண்டாம். யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளையும் தயவுசெய்து கொடுக்காதீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றம் ஏற்படும்.
கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்