சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம் மற்றும் உயர்கல்வித் துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.