மகரம் ராசி நண்பர்கள், இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வது நல்லது. பிறரிடம் வீண் பேச்சு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மரியாதை கிடைக்கும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக்கூடும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். தைரியத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கூடுமானவரை மற்றவர்களிடமும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் காதலில் உள்ளவர்களுக்கு நன்மையான நாளாகவே இன்று இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்த பிரச்சனையும் கல்வியில் இல்லை, கல்வியில் இருந்த தடை விலகி, இன்று சிறப்பான நாளாக இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கும் நல்லதே நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்