மகரம் ராசி நண்பர்களே...இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தாமதம் விலகிச் செல்லும் பாதையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உங்கள் பொருட்கள் கொஞ்சம் கவனமாக வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான மகிழ்ச்சியும் காத்திருக்கிறது. புகழும்,விருதுகளும் கிடைப்பதற்கான அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு ஆனால் அதற்கு ஏற்ற செயல்பாடுகள் மட்டும்தான் தேவை.எழுத்துப் பணியில் இருப்பவர்கள் சலைக்காமல் பணியைச் செய்வார்கள். இன்று கொடுக்கல் வாங்கல்கள் கொஞ்சம் சரளமாக இருக்கும் பெரிய தொகையை மட்டும் ஏதும் ஈடுபடுத்த வேண்டாம் அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை:கிழக்கு
அதிஷ்ட எண்:1 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை