Categories
ஆன்மிகம் ராசிபலன்

மகர ராசியின் தடைகளும்..மனதைரியமும் ..!!

இன்று விஐபிகளின் சந்திப்பால் நல்லகாரியம் நடைபெறும்.நல்ல காரியத்திற்கு சிறிய தடையும் தாமதமும் இருக்கும் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள் மனக்கவலை அவ்வப்போது இருக்கும் தேவையில்லாத விஷயத்திற்காக தயவுசெய்து மனக் கவலை படவேண்டாம். மதியத்திற்கு மேல் மனக் குழப்பங்கள் தீரும் சற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படமால் பார்த்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத பொருட்களின் மீது கண்டிப்பாக முதலீடுகள் செய்ய வேண்டாம். பொறுமை காக்க வேண்டும் நிதானமாக செயல்பட வேண்டும்.

ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் யாரிடம் பேசினாலும் கோபத்தை மட்டும் வெளிக் காட்டாதீர்கள் வாக்குவாதத்தில் கண்டிப்பாக ஈடுபடாதீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது  நல்லது இள மஞ்சள் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று  சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |