மகர ராசி அன்பர்களே…. இன்று அரசு உதவிகள் வி ஐ பி களின் சந்திப்பு ஆதரவு புதிய வேலைவாய்ப்பு கல்வியில் தேர்ச்சி என அனைத்துவிதமான பலன்களையும் நீங்கள் எதிர்பார்க்க கூடும். இன்று அனைத்து விஷயமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். வாழ்க்கையில நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் இன்று ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும் அதாவது உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும் எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதி உதவியும் இன்று கிடைக்கும்.பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.
எதிரிகள் விலகிச்செல்வார்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள் மனைவி மூலம் சில முக்கிய பணியும் நிறைவேறும் எதிர்பார்த்தது இன்று பூர்த்தியாகும் நாள் என்றும் சொல்லலாம். அதே போல உடலில் வசீகரத் தன்மை கூடி காதலில் பயப்படக்கூடிய சூழல் அமையும் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண முயற்சி பேச்சுவார்த்தை நடத்துங்கள் சிறப்பாக இருக்கும், முன்னேற்றம் ஆகவும் இருக்கும் .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுபோலவே இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்