Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி… தாயின் உடல்நலனில் அக்கறை வேண்டும்….எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்…

மகர ராசி அன்பர்களே… இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் கவலை வேண்டாம்.நீர்நிலைகளில் கவனமுடன் இருங்கள்.நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு வந்து சேரும்,உறவினர்கள் மூலமும் உதவி கிடைக்கும்.அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நல்ல பெயரை பெறுவீர்கள்.திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

தேவை இல்லாத விசயத்திற்கு கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள் அதை மட்டும் நீங்கள் சரி செய்து கொண்டாலே போதுமானது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடியும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மயில் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்ற செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |