மகர ராசி நண்பர்களே…..இன்று பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய நாள் ஆகியிருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் மதில்மேல் பூனையாக இருந்த நிலை இன்று மாறும். புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிப்போடுவது நல்லது.
பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டாலும் வந்து சேரும். யாருக்கும் எந்தவித வாக்களிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் உயர்வு பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது வெற்றியை கொடுக்கும்.
செலவை குறைப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் அதனால் இன்னல் ஏதும் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்.மற்றவரை தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டார் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு மற்றும் நீல நிறம்